நவம்பர் 2024 இல் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ஏக்கர் பயிரிடப்பட்ட நிலம் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக சுமார் 100,000 விவசாயிகள் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட வயல்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீடு கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.